அதிர்ச்சியில் அதிமுக, பாஜக, தேமுதிக..! தொண்டர்களை வளைத்துப்போட்ட திமுக..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 2021 ஆம் வருடத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில், கட்சி தாவல்கள் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. கட்சி தாவல்களை பொறுத்த வரையில் தொண்டர்கள் முதல் அமைச்சர் பெருமக்கள் வரை மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். 

இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், விழுப்புரம் - விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக விவசாய அணி அமைப்பாளர் வி.பழனியின் தலைமையில், தேமுதிக ஒன்றிய பொருளாளர் பால்சிங், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணை செயலாளர் யோகேஸ்வரன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். 

இதனைப்போன்று பாஜக கட்சியின் கிளை தலைவர் ராஜ்கிரண், பாஜக துணைத்தலைவர் நவீன், தேமுதிக கிளை செயலாளர் ஜெய்தீப் சிங், அதிமுக கட்சியை சார்ந்த மணி, முனுசாமி, கிருபாகரன், அய்யனார் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். இவர்கள் அனைவரும் அதிமுகவில் சொந்த ஊர்களில் நல்ல நிலையில் இருந்து வந்த நிலையில், திடீரென திமுகவில் இணைந்தனர். இது உள்ளூர் அதிமுக கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK, BJP, DMDK Party Members Join DMK Anna Arivalayam 27 November 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->