#Breaking: பாஜக அதிமுக கூட்டணி அதிகாரபூர்வமாக ஒப்பந்தமானது! எத்தனை தொகுதிகள் தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தமானது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி வெளியான அறிக்கையில் 6 4 2021 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் 6 4 2021 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது முழு ஆதரவு அளிக்கும் என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK BJP alliance signed


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->