அதிமுக, நாம் தமிழர் கட்சியின் முக்கிய புள்ளிகள் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைவு..! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமே மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான தொண்டர்கள் இருக்க வேண்டிய இடம் என்பதை அம்மாவின் நிஜமான தொண்டர்கள் ஏற்கனவே உணர்ந்திருக்கிறார்கள். 

அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், அ.இ.அ.தி.மு.க. மாநில மீனவரணி செயலாளர் நீலாங்கரை திரு.M.C.முனுசாமி அவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையை ஏற்று இன்று கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.தா.வேங்கை பிரபாகரன் அவர்களும், மற்றும் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளரும், சிவகங்கை பாராளுமன்றத்தொகுதி வேட்பாளருமான திருமதி.தமிழ் பிரியா அவர்களும் அக்கட்சியிலிருந்து விலகி கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையை ஏற்று இன்று கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK and NTK Supporters Join AMMK TTV Dhinakaran Party


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->