அதிமுகவின் வெற்றியை அறிவித்த தொகுதி மக்கள்!! அள்ளுவிடும் பூசணிக்காய்!!  - Seithipunal
Seithipunal


திமுக தனது கூட்டணி கட்சியான மதிமுகவிற்கு ஈரோடு தொகுதியை ஒதுக்கியுள்ளது.  கொங்கு மக்கள்  அதிகம் வாழும் பகுதியாக அது இருப்பதால் அதிமுகவிற்கு அங்கு பலம் அதிகம். 

ஜெயலலிதா காலம் தொட்டே அதிமுகவின் கோட்டையாக அது பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நிலையான ஆட்சி இல்லை என புறம் கூறிக்கொண்டிருந்தாலும், அதையெல்லாம் அம்மக்கள் பொருட்படுத்துவதே இல்லை. 

தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு குரல் கொடுக்கும் மக்கள் அங்கு ஆத்திகம் உள்ளனர். என்பதனை உணர முடிகிறது. மதிமுக சார்பில் போட்டியிடும் கணேசமூர்த்தி ஏற்கனவே தொகுதியில் அறிமுகம் ஆனவர். 

அதிமுக கூட்டணியில் மதிமுக 2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அவரை அங்கு நிறுத்தியது. அதில் அவர் வெற்றியும் பெற்றார். இதைப்போலவே, 2014 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். 

அதிமுக சார்பில் வெங்கு என்று பொதுமக்களால் அழைக்கப்படும் ஜி. மணிமாறன் அவரை எதிர்த்து நிற்க உள்ளார். இவர் காங்கேயம் பகுதியை சேர்ந்த நகர செயலாளர் அங்குள்ள மக்கள் வெங்குவிற்கு மிகுந்த ஆதரவு அளித்து வருகினறனர். 

மதிமுக தனது சின்னத்தை இழந்துள்ளது. மேலும், அது பூசணிக்காய் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. அதிமுகவிற்கு மேலும், பலத்தை கூட்டும் விதத்தில் அமைந்துள்ளது. இருப்பினும் அதிமுக, தீவிர களப்பணியில் ஈடுபட்டால் எளிதாக வெற்றிக்கனியை கிட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Admk and mdmk tough competition in this volume


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->