உடுமலைபேட்டையில் இந்த கல்வியாண்டிற்கான பணிகள் தீவிரம்..! - Seithipunal
Seithipunal


இலவச பாடபுத்தங்கள் வழங்குதல் மற்றும் இதர பணிகளுக்காக ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிந்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. இந்நிலையில், இந்த ஆண்டும் கொரோனா பரவல் அதிகமான காரணத்தால் பள்ளிகள் திறப்பு இப்போது இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி தொலைகாட்சி வாயிலாக அவர்களுக்கு வகுப்புகள் நடத்துதல், அவர்களுக்கான கால அட்டவணை தயார் செய்தல் போன்ற பணிகளுக்காக ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

உடுமலைபேட்டையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வந்துள்ளதை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் உறுதிசெய்துள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்: எல்லா பாட ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகின்றனர். இவர்கள் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்குதல், அவர்களுக்கான பாடங்களை தயார் செய்தல் போன்ற பணிகளை செய்துவருவதாக கூறினர்.

மாற்றுதிறனாளிகள் மற்றும் நோய்தொற்று பாதித்தவர்கள் உரிய ஆவணங்கள் செலுத்தி பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு பெற்றுகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Admissions open for this academic year in Udumalaipettai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->