தமிழகத்தில் இன்று முதல் 23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அமல்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு ஜூன் மாதம் 28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டு இருக்கிறது. தளர்வுகளுடன் ஜூன் மாதம் 28 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள்‌ மட்டும்‌ தொடர்ந்து அனுமதிக்கப்படும்‌. 

மற்ற மாவட்டங்களில் தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள்‌, காய்கறிகள்‌, இறைச்சி மற்றும்‌ மீன்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

காய்கறி, பழம்‌ மற்றும்‌ பூ விற்பனை செய்யும்‌ நடைபாதைக்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

உணவகங்கள்‌ மற்றும்‌ அடுமணைகளில்‌ (Hotel and Restaurant) பார்சல்‌ சேவை மட்டும்‌ காலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும்‌. மின்‌ வணிகம்‌ (E Commerce)மூலம்‌ உணவு விநியோகம்‌ செய்யும்‌ அனைத்து மின்‌ வணிக நிறுவனங்கள்‌ மேற்கண்ட நேரங்களில்‌ மட்டும்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

இதர மின்‌ வணிக சேவை நிறுவனங்கள்‌ அனைத்தும்‌ காலை 06.00 மணி முதல்‌ இரவு 09.00 வரை இயங்கலாம்‌.

இனிப்பு மற்றும்‌ காரவகை விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6.௦௦ மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

அரசின்‌ அனைத்து அத்தியாவசியத்‌ துறைகள்‌ 100% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌. இதர அரசு அலுவலகங்கள்‌, 50% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

சார்‌ பதிவாளர்‌ அலுவலகங்கள்‌ முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும்‌,

அனைத்து தனியார்‌ நிறுவனங்கள்‌, 33% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

ஏற்றுமதி நிறுவனங்கள்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரித்து வழங்கும்‌ நிறுவனங்கள்‌ 100 “சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்‌.

இதர தொழிற்சாலைகள்‌ 33% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மின்‌ பொருட்கள்‌, பல்புகள்‌, கேபிள்கள்‌, ஸ்விட்சுகள்‌ மற்றும்‌ ஒயர்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மிதிவண்டி மற்றும்‌ இருசக்கர வாகனங்கள்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

ஹார்டுவேர்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

வாகனங்களின்‌ உதிரிபாகங்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

கல்விப்‌ புத்தகங்கள்‌ மற்றும்‌ எழுதுபொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

வாகன விநியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும்‌ மையங்கள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

வாகனங்கள்‌ விற்பனை செய்யும்‌ நிறுவனங்கள்‌ மற்றும்‌ விநியோகஸ்தர்களது கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

காலணிகள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌. கண்கண்ணாடி விற்பனை மற்றும்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

பாத்திரக்‌ கடைகள்‌, பேன்ஸி, அழகு சாதனப்‌ பொருட்கள்‌, போட்டோ/ வீடியோ கடைகள்‌, சலவைக்‌ கடைகள்‌. தையல்‌ கடைகள்‌, அச்சகங்கள்‌, ஜெராக்ஸ்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மண்பாண்டம்‌ மற்றும்‌ கைவினைப்‌ பொருட்கள்‌ தயாரித்தல்‌ மற்றும்‌ விற்பனை காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

தேநீர்க்‌ கடைகளில்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை பார்சல்‌ சேவை மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌ என தெரிவித்துள்ளனர். இந்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

additional relaxations in 23 districts


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->