#Breaking: விசிக வன்முறை கட்சி.. அவர்களால்..... நடிகை குஷ்பூ பரபரப்பு பேட்டி..!! - Seithipunal
Seithipunal


நடிகை குஷ்பூ கடலூருக்கு செல்லும் நேரத்தில், இடையிலேயே காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கேளம்பாக்கம் விடுதியில் அடைக்கப்பட்டார். தற்போது கேளம்பாக்கத்தில் இருந்து புறப்பட்ட நடிகை குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு எதிராக நடந்த போராட்டம். நான் தலைமையேற்று பாஜகவுடன் சேர்ந்து போராட்டம் செய்தாலும், ஒட்டுமொத்த பெண்களுக்காக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பெண்கள் மதிக்கப்படும் இடத்தில் கடவுள் இருப்பார். 

பெண்களை மதிக்காத இடத்தில் கடவுள் இருக்கமாட்டார். தேர்தல் நேரங்களில் கடவுளை வணங்க கோவில், மசூதி, சர்ச்களுக்கு திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சென்று வருகின்றனர். பிரச்சனையை செய்ய வேண்டும் என்றே பெண்கள் தொடர்பாக இழிவுபடுத்தி பேசியுள்ளனர். 

பாஜகவை மக்கள் மத்தியில் கீழ்த்தரமாக விமர்சனம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே அனைத்தையும் செய்து வருகின்றனர். பெண்களுக்கும் எதிராக செய்யும் செயல்கள் அனைத்தும் தவறானவை. மனுஸ்ருதியில் பெண்களுக்கு பாதுகாப்பு தொடர்பாகவும் கூறப்பட்டது. 

தேவையற்ற விஷயத்தை வேண்டும் என்றே திருமாவளவன் பேசி வருகிறார். தன்னை அம்பேத்கார் போல என அடையாளப்படுத்திவிட்டு, பெண்களை அவதூறாக பேசுவது என்ன நியாயம்?.. தங்களின் இல்லத்திற்குள்ளே கொள்கையை துவக்குங்கள்.. அதன்பின்னர் மக்களிடம் கொள்கையை சென்று சேருங்கள். 

விசிகவால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று காவல் துறையினர் கருதியதால், எங்களை இங்கேயே மடக்கி வைத்துள்ளனர். அவர்கள் வன்முறை கட்சியினர் என்று சொல்லாமல் சொன்னார். திருமாவளவனும், அவருக்கு அதரவு தெரிவிக்கும் கட்சியினரும் கடவுள் இல்லை என்று கூறிவிட்டு, தேர்தல் நேரத்தில் கோவிலுக்கு செல்வது ஏன்?. எஸ்.வி சேகர் பெண்கள் குறித்து பேசுகையில் நான் பாஜகவில் இல்லை. பாஜகவில் இல்லாத போதும் அவருக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து இருக்கிறேன். அலைபேசியில் தொடர்பு கொண்டும் நான் கண்டனத்தை தெரிவித்தேன் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Kushboo Press meet 27 October 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->