சட்டப்பேரவை தேர்தல் 2021: உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறேன் - நடிகை குஷ்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக வாக்காள பெருமக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய காலை முதலாகவே வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகை தந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 

கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் உட்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை இராணுவ படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், நடிகை மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்பூ தனது வாக்குகளை பதிவு செய்தார். இதனைதொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " நான் வேட்பாளராக களமிறங்கியுள்ளது மிகுந்த மனமகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. 

வாக்களிக்க பொதுவாகவே எனக்கு அதிகளவு விருப்பம். 5 வருடத்திற்கு பின்னர் எனது விரலில் மை வைக்கப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள மக்களையும், அவர்கள் வாக்களிக்க வந்ததையும் பார்க்கையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 

சில இடங்களில் இ.வி.எம் இயந்திரம் பிரச்சனை இருந்தது. அவற்றை சரிசெய்து வாக்குப்பதிவை தொடங்கியுள்ளனர். வாக்களிக்க வருகையில் எந்த கட்சியின் அடையாளத்தையும் கொண்டு வருவது தவறானது. உதயநிதி மீதான குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் பார்த்துக்கொள்ளும். 

மே 2 ஆம் தேதி தேர்தல் வந்ததும் மு.க ஸ்டாலினுக்கு உண்மை தெரியும். இப்போது திமுகவினர் என்னவென்றாலும் பேசலாம். முடிவுகள் வரட்டும். பெண்கள் அதிகளவு வாக்களிக்கிறார்கள். மக்கள் காலையில் இருந்து அதிகளவு வாக்களிக்கிறார்கள். இதனால் இந்த வருடம் தேர்தல் வாக்குப்பதிவு விகிதம் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கி வாக்குகளை பதிவு செய்ய வைத்துள்ளார்கள். கொரோனா விதிமுறையை மக்களும், அதிகாரிகளும் பின்பற்றுகிறார்கள் " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress and BJP Candidate Kushboo Pressmeet After Complete Voting 6 April 2021 TN Election 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->