2021 ஆம் ஆண்டு நான்தான் தமிழக முதலமைச்சர்.! பிரபல நடிகர் பேட்டி.. தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


வருகிற 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ரஜினி கட்சி தொடங்கப் போவதாக கூறி வருகின்றனர்.

நேற்று ரஜினி சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தான் முதலமைச்சர் ஆக ஆசைப் படவில்லை எனவும், கட்சியை நிர்வகிக்க போவதாகவும், முதலமைச்சர் வேட்பாளராக வேறு ஒருவரை நியமிக்க போவதாகவும் கூறினார். மேலும் இளைஞர்களுக்கு கட்சியில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில், நடிகர் வடிவேலு ரஜினி கட்சி தொடங்குவது குறித்து பேசியுள்ளார். ரஜினி கட்சி தொடங்குவது குறித்து நமக்கு எதுவும் தெரியாது என கூறினார். நேற்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் நடிகர் வடிவேல் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.

உலக நன்மைக்காக சாமி தரிசனம் செய்ததாக கூறினார். கட்சிக்கு ஒருவர், ஆட்சிக்கு வருவார் என ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என தெரிவித்தார். ரஜினி அரசியலுக்கு வருவார் என்பது உங்களுக்கு தெரியாது, எனக்கும் தெரியாது, அவருக்குத்தான் தெரியும். அவர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம். மேலும் தான் முதலமைச்சராக்கலாம் என நினைத்துள்ளதாகவும், 2021ஆம் ஆண்டு நான்தான் தமிழக முதலமைச்சர் எனவும் நகைச்சுவையாக கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vadivelu says rajini


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->