ஒசாமா பின்லேடன் அட்ரஸ் கேட்ட நடிகர் கிருஷ்ணமூர்த்தி மறைவு..! திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் கிட்டி என்று பிரபலமாக அழைக்கப்படும் ராஜ கிருஷ்ணமூர்த்தி இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகரும் ஆவார். இவரை தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது பிற திரையுலகிலும் அறியாத நபர்களே இல்லை என்று தான் கூற வேண்டும். 

இவர் தனது முதல் திரைப்பட பயணத்தை கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் மணி இரத்தினத்தின் "நாயகன்" திரைப்படத்தில் அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும்., இவர் நடிப்பதோடு மட்டுமல்லாது கடந்த 1993 ஆம் வருடத்தில் "தசரதன்" என்ற திரைப்படத்தினை இயக்கினார். 

actor krishnamoorthy, comedy actor krishnamoorthy,

இந்த படம் திரைக்கு வெளியாகி நல்ல வரவேற்பையும்., பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும்., வடிவேலுவுடன் நடித்த காமடி காட்சிகள் நம்மில் இன்றளவும் மறக்காத நினைவுகளை பெற்றுள்ளது. இந்த நிலையில்., தேனி மாவட்டத்தில் உள்ள குமுளி அருகே திரைப்படத்தின் படப்பிடிப்பில் இவர் கலந்து கொண்டு உள்ளார். 

இந்த நிலையில்., இவர் திரைப்படத்தில் இவர் நடித்துக்கொண்டும் இருக்கும் போதே உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த நிலையில்., தற்போது இயற்கையை எய்தியுள்ளார். இதனை அறிந்த தமிழ் திரையுலகம் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor krishnamoorthy died cinema fans are feel sad


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->