"காலுக்கு இடையில் இருக்கும் உறுப்பு அதுவல்ல." பாராட்டுக்களை பெற்ற கமல்ஹாசனின் ஓபன் டாக்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் கமலஹாசனின் பேட்டியில் காதலர் தினம் குறித்து தெரிவித்த கருத்து பலரது விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது. பிரபல நடிகர் கமலஹாசன் பேட்டி கொடுத்தாலும், அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தாலும் சாதாரணமானவர்களுக்கு அது புரிவதே இல்லை என்ற ஒரு விமர்சனம் தொடர்ந்து அவர் மீது வைக்கப்படுகின்றது. 

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் காதலர் தினம் குறித்து அவர் அளித்த பேட்டியில் செக்ஸுவல் உறுப்பு என்பது இரு கால்களுக்கு இடையில் இருப்பதாக பலரும் கற்பனை செய்து கொண்டு இருக்கின்றனர். ஆனால், உண்மையில் அது இரண்டு கால்களுக்கு இடையில் இல்லை. காதுகளுக்கு இடையில் தான் இருக்கிறது.

அதை புரிந்து கொண்டால் அனைத்தும் சரியாகிவிடும். காதல் என்பது உடல் தாண்டியது என்பதை இந்த தலைமுறையினர் வெகு சீக்கிரத்தில் புரிந்து கொள்வார்கள் என்றே நினைக்கின்றேன். அதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றது." என்று தெரிவித்துள்ளார். 

கமலஹாசனின் இந்த ஓபன் டாக் பலரையும் கவர்ந்து இருக்கின்றது. இதற்கு சிலர் எதிரான விமர்சனம் செய்து வந்தாலும், பலரும் வித்தியாசமான கோணத்தில் யோசிக்கும் கமலஹாசன் காதலர் தினத்தை காதலர்கள் போல சிந்திக்காமல் அடுத்த தலைமுறையினருக்கு தேவையான ஒரு கருத்தை கூறியிருக்கிறார்." என்று பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor kamalhasan open talk about lovers day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->