நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பற்றி அறிவித்த  நகராட்சி  நிர்வாகம் அமைச்சர் கே.என் நேரு - Seithipunal
Seithipunal


 

நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் அமைச்சர் கே.என் நேரு, அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது தமிழகத்தில் வரும் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் செப்டம்பர் 15க்குள் விடுபட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம், மகளிருக்கு இடஒதுக்கீடு மற்றும் வாக்காளர் பட்டியல் சரிசெய்யும் பணி ஆகியவை நடைபெற்று கொண்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் மீதமுள்ள பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என 2 வகையான உள்ளாட்சி அமைப்புகளும், அவற்றில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகளும் உள்ளன. தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களுக்கு 2019 டிசம்பரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

about local election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->