ஈரோடு: பவானி கூடுதுறையில் ஆடிபெருக்கு கொண்டாட்டத்திற்கு தடை..! - Seithipunal
Seithipunal


கொரோனா பரவல் காரணமாக ஆடிபெருக்கு அன்று பவானி கூடுதுறை கலையிழந்து காணப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18ம் நாள் ஆடி பெருக்கு கொண்டாடுவர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்று வழிப்படுவர். தென்னகத்தின் திருவேணி சங்கமம் என்றழைக்கப்படும் பவானி கூடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக ஆடிபெருக்கு கொண்டாடப்படும். மக்கள் இங்கு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் தருவர்.

இதேபோல புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் தாலி மாற்றி, புது தாலிகட்டி கொண்டு பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் வழிப்படுவர். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பவானி படித்துறையில் மக்கள் கூட தடை விதிக்கபட்டிருந்தது. 

தற்போது கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வரும்நிலையில், இன்று ஆடிபெருக்கு விழாவை பவானி கூடுதுறையில் கொண்டாட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மக்கள் அதிகமாக கூடினால் பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கபட்டுள்ளது.

இதனால் பவானி ஆற்றுக்கு செல்லும் வழிகளில் போலீசார் தடுப்புகளை கொண்டு அடைத்துள்ளனர். இதேபோல ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் பாவனிகூடுதுறையில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadiperukku Celebration ban in bavani kooduthurai due to the covid 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->