ஆடி கடைசி வெள்ளி! தள்ளாடியதா தமிழகம்! அதிர்ச்சி ரிப்போர்ட்! - Seithipunal
Seithipunal


ஞாயிற்று கிழமைகளில் கொரோனா பரவல் காரணமாக தளர்வற்ற முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகளும் இல்லாமல் அவசர தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

ஞாயிற்று கிழமைகளில் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை என்பதால் மதுபானம் இல்லாமல் விழிபிதுங்கும் மதுபிரியர்கள், முன்னதாகவே வாரம் தோறும் சனி கிழமை அன்றே மதுபானங்களை வாங்கி வைத்து கொள்கின்றனர். 

இந்நிலையில், நேற்று ஆடி கடைசி வெள்ளி என்பதால் தமிழகத்தில் ஊரக பகுதிகளில் மது விற்பனை அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் ரூ. 248 கோடிக்கு மதுவிற்பனை ஆகியுள்ளது.

குறிப்பாக, திருச்சியில் ரூ. 55.77 கோடியும், மதுரையில் ரூ.56.45 கோடியும், சேலம்த்தில் ரூ.54.60 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. மேலும், கோவையில் ரூ.49.78 கோடியும், சென்னையில் ரூ.31.50 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aadi last Friday tasmac sale


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->