போதையானாலே யாரையேனும் திட்டனும்.. லாரியில் வழுக்கி விழுந்து, மாவுக்கட்டு கதறல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருச்செந்தூர் மாவட்டத்திலுள்ள சலவையார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டிருந்த நிலையில், தனக்கு மது போதை ஏறியதும் யாரையாவது ஆபாசமாக பேசி வீடியோ பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருச்செந்தூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனை அவதூறாக பேசி சமூகவலைதளத்தில் வீடியோவை பதிவு செய்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், காவல் துறையிடமிருந்து தப்பிக்கும் பொருட்டு தலைமறைவாகியுள்ளார். 

இதனையடுத்து, மணிகண்டனை காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ சார்ந்த சமுதாயப் பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசிய வீடியோ பதிவு செய்த நிலையில், தன்னை யாரும் பிடிக்க முடியாது என்றும், தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் சவால் விடும் அளவிற்கு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

இதனை கண்டித்து பல்வேறு காவல் நிலையங்களில் புகார் வந்த நிலையில், குலசேகரப்பட்டினம் பகுதியில் வலது கையில் கட்டுடன் மணிகண்டனை திருச்செந்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் மணிகண்டனிடம் மேற்கொண்ட விசாரணையில், பெங்களூரில் இருப்பது போல முகநூலில் சித்தரித்து வந்த நிலையில், கேரள மாநிலத்தில் இருக்கும் குருவாயூர் பகுதியில் சுற்றித்திரிந்தது தெரியவந்துள்ளது. 

பின்னர் இவரை எம்.எல்.ஏவின் சமுதாய இளைஞர்கள் அடையாளம் காண தொடங்கியதும், அவர்களிடமிருந்து தப்பி செல்ல அவ்வழியாக சென்ற காய்கறி லாரியில் ஏறி குதித்த நிலையில், நிலைதடுமாறி விழுந்ததில் வலது கையில் முறிவு ஏற்பட்டதும், அந்த லாரி திருச்செந்தூருக்கு காய்கறிகளை இறக்க வந்ததும் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் கை வலியுடன் மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்று, குலசேகரன்பட்டினம் பகுதியில் பதுங்கி இருந்த நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A youngster arrest in Thiruchendur police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->