கிருஷ்ணகிரியில்., பனைமரத்தின் உச்சியிலே பரிதாபமாக உயிரை விட்ட தொழிலாளி.! கண்ணீரில் குடும்பத்தார்கள்.!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமல்பட்டியை அடுத்துள்ள கஞ்சனூர் நாடார் தெருவை சார்ந்தவர் கணேசன் (58). இவர் பனைமரம் ஏறும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில்., இன்று காலையில் 6 மணியளவில் பனை மரத்தின் மீது எறியுள்ளார். அந்த சமயத்தில் இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு இதனால் மரத்தின் உச்சியில் இருந்த படியே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். 

இதனை கண்ட சக உறவினர்கள் உடனடியாக சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கும்., காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மரத்தின் உச்சியில் இறந்த கணேசனை மீட்டனர். 

அவரது உடலை சோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது., அவரின் உடலை பார்த்த குடும்பத்தார்கள் கண்ணீரில் கதறியழுத சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 
 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a worker died in palmyra tree top side


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal