வீடியோவை வெளியிட்டவாறு விஷம் குடித்த பெண்.! வெளியான அதிர்ச்சி வீடியோவால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகளை குறைப்பதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதே இந்த பிரச்சனைகளை குறைக்க வழி வகுக்கும், அதேபோன்று சட்டதிட்டங்களையும் கடுமையாக்க வேண்டும்..பெண்கள் வெளியே செல்லும் போதும், பணிகளில் இருக்கும் போதும் பல விதமான முறையில் பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு உள்ளாகி அவர்களின் வாழ்க்கையை இழந்து வருகின்றனர். அதே போன்ற ஒரு சம்பவம் தற்போது நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியை சார்ந்த பெண் கார்த்திகா, இவர் அங்கு உள்ள தனியார் நிறுவன ஷோரூமில் பணியாற்றி வரும் நிலையில், அங்குள்ள 3 ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் ஊழியர் உட்பட நான்கு பேர் சேர்ந்து அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை வழங்கியுள்ளனர்.

இந்தப் பெண்ணிற்கு திருமணம் முடிந்து குழந்தைகள் மற்றும் கணவர் இருக்கும் நிலையில் இந்த துயரமானது அரங்கேறியுள்ளது. இதனை தாங்க முடியாத பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் அந்த பெண் பேசியதாவது, எனது பெயர் கார்த்திகா. நான் காரைக்குடியில் உள்ள தனியார் ஷோரூமில் பணியாற்றி வருகிறேன், என்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களான அமுதா, வைரவன், சபரி, செபாஸ்டின் ஆகிய நால்வரும் சேர்ந்து எனக்கு பாலியல் தொல்லை வழங்குகின்றனர். என்னிடம் வந்து ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 அல்லது ரூ.2000 ஆ என்று மறைமுகமாகவும் நேரடியாகவும் பலமுறை கேட்டு உள்ளனர். இந்த இளைஞர்களுக்கு  ஒத்துழைக்கும் ஒரு பெண் ஒருவர் என்னிடம் வந்து, நீ தற்போது அவர்களின் ஆசைக்கு இணங்கு, அவ்வாறு இணங்கினால் நீ வாழ்க்கையில் பெரிய இடத்திற்குச் சென்று விடலாம் என்று கூறி என்னை மிரட்டி வருகிறார்‌. 

இது மட்டுமல்லாது எனது கணவருக்கு தொடர்பு கொண்ட அமுதா, எனக்கு முறையற்ற பழக்கம் நிறைய ஆண்களுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் என்னிடமிருந்து விலக்கம் அடைய துவங்குகிறார்.. இவர்களின் கொடூர எண்ணத்தாலும் பேச்சுக்களாலும் நான் கடுமையான மன வேதனை அடைந்துள்ளேன். அந்த அமுதா பெண் உண்மையிலேயே தவறான பழக்கம் உடையவராவார்.. 

இவர்கள் அனைவரும் சேர்ந்து எனது வாழ்க்கையை சீரழிக்க முடிவு செய்து இந்த செயலை அரங்கேற்றி உள்ளனர். இதனால் நான் கடுமையான மன வேதனையில் தற்போது தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்துக் கொள்கிறேன். 

என்னை உங்களின் தாயாக சகோதரியாக தங்கையாக நினைத்து அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று விரும்பி எனது இறுதி முடிவுகள் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி கடைசியாக இடத்தை அருந்துகிறார். இது குறித்த வீடியோ பதிவுகள் வெளியான நிலையில், தற்போது வரை இந்த பிரச்சனை குறித்து எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை.. இந்த துயரம் தற்போது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பெண் வெளியிட்ட வீடியோ:

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A women suicide in sivagangai


கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
Seithipunal