பெண் காவல் அதிகாரியை கூட்டுப்பலியால் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரம்.!! மதுரையில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் வசித்து வரும் பெண் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனுவை அளித்துள்ளார். அந்த புகாரில்., 

கடந்த 2007 ஆம் வருடத்தின் போது எனக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணம் முடிந்த எனக்கு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த சமயத்தில்., எனது கணவருக்கும் - எனக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருந்தோம். 

இந்த சமயத்தில்., எனக்கு நண்பர்களாக அறிமுகமாகிய பூமிநாதன் மற்றும் தல்லாகுளம் பகுதியை சார்ந்த ஆறுமுகம் என்பவர் எனது கணவருடன் மீண்டும் சேர்த்து வைப்பதாக தெரிவித்தனர். இதற்காக அவ்வப்போது அவர்களுக்கு தேவையான பணத்தை வழங்கி வந்த நிலையில்., மொத்தமாக ரூ.ஒன்றரை இலட்சம் வரை கொடுத்துள்ளார். 

இந்த நேரத்தில்., அங்குள்ள காந்தி அருங்காட்சியக விடுதிக்கு வர சொன்ன இருவரும்., கேரளாவில் உள்ள சாமியாரை அழைத்து வந்ததாக கூறி கணவரின் சட்டை மற்றும் காலடி மண்ணை எடுத்து கொண்டு அவருக்கு ரூ.ஐம்பதாயிரம் தந்தால் கணவனை சேர்த்து வைக்க வசியம் செய்வார் என்று கூறியுள்ளார். இதனை ஏற்ற பெண்ணும் அனைத்தையும் தயார் செய்து அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். 

இதற்கு பின்னர் பணத்தை தயார் செய்து தேவையான பூஜை சாமான்களை வாங்கிய நிலையில்., காரில் அங்குள்ள கீழமாசி வீதிக்கு சென்று மீண்டும் விடுதியறைக்கு வந்துள்ளார். இந்த சமயத்தில்., சில தடங்கல் உள்ளது என்று கூறி பெண்ணின் கையில் மையை தடவிய நிலையில்., சிறிது நேரத்தில் சுயநினைவு இழந்து மயங்கியுள்ளார். 

சுயநினைவை இழந்த பெண்ணை இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த நிலையில்., மயக்கத்தில் இருந்த பெண் ஆடைகள் கலைக்கப்பட்டு தனக்கு நிகழ்ந்திருக்கும் கொடுமையை உணர்ந்துள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில்., இது குறித்த புகாரை ஏற்ற காவல் அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a women police sexual harassment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->