மக்களுக்காக கவர்மெண்டா? கவர்மெண்டுக்காக மக்களா? ஆவேசமாக, வி.ஏ.ஓ-வை உள்ளே சிறை வைத்து பூட்டி, மண்ணெண்ணெயுடன் வந்த மக்கள்….! அலறிய வி.ஏ.ஓ….! அதிர்ச்சி சம்பவம்…. - Seithipunal
Seithipunal


!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா மத்துார் அருகே எட்டிப்பட்டி கூட்ரோடு பகுதியில், கடந்த 4 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

இங்கு வருவோர், மதுவை அருந்தி விட்டு, போதையில், சாலையில் போகும் பெண்களை, கிண்டல் செய்து கொண்டும், ஆபாச வார்த்தைகளால் பேசியும் வருகின்றனர். இதனால், இந்தப் பகுதியில், பள்ளிக்குக் பெண் பிள்ளைகள் செல்ல அச்சப் படுகின்றனர்.

இது குறித்து, கிராம மக்கள் பல முறை கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள். பல போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், எந்த பலனும் இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பாக, இந்தக் கடையை மூடக் கோரி, இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனால், இங்குள்ள டாஸ்மாக் கடையை அருகில் உள்ள கூரம்பட்டி கிராமத்திற்கு மாற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைக் கேள்விப்பட்டு, ஆவேசம் அடைந்த கூரம்பட்டி கிராம பெண்கள், எட்டிப்பட்டியில் உள்ள வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு காளிராஜன் வி.ஏ.ஓ. உள்ளே இருந்தார்.

உடனே, பெண்கள் தாங்கள் கொண்டு வந்த பூட்டைக் கொண்டு, வி.ஏ.வை உள்ளே வைத்து விட்டு, வெளியே உள்ள கதவைப் பூட்டினர். பின், அந்தக் கதவருகே அமர்ந்து கொண்டு, இனி மேல் டாஸ்மாக் கடையைத் திறப்பியா? என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உள்ளே மாட்டிக் கொண்ட வி.ஏ.ஓ. பதறிப் போய், தாசில்தாருக்கு போன் செய்தார்.

அந்த சமயம், சில பெண்கள் கையில், மண்ணெணெயுடன் வந்து, தீக்குளிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர். சற்று நேரத்தில், ஊத்தங்கரை தாசில்தார், போலீசுடன் வந்து, வி.ஏ.ஓ-வை மீட்டார்.

பின், அங்குள்ள மக்களிடம் சமாதானமாகப் பேசினார்.

அப்போது அங்கிருந்த பெண்கள், “மக்களுக்காக அரசாங்கமா? அரசாங்கத்துக்காக மக்களா? என்று கேள்வி கேட்டனர். அவர்களின் கேள்விக்கு, எந்த அதிகாரியாலும் பதில் அளிக்க இயலவில்லை. பின், மக்கள், மீண்டும் கடை திறந்தால், தாங்கள் தீ வைத்துச் சாவதைத் தவிர வேறு வழியில்லை, என்று வேதனையுடன் கூறியவாறு கலைந்து சென்றனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a V.A.O. under house arrest by the public


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal