சக ஊழியர்களின் டார்ச்சரால், டாஸ்மாக் ஊழியர் எடுத்த விபரீத முடிவு….! பரபரப்பான சம்பவம்….! - Seithipunal
Seithipunal


 

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் உள்ள, டாஸ்மாக் கடை எண்-6904-ல் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார் மணிராசு (வயது 45). இவருடைய சக ஊழியர்களான, விற்பனையாளர் செல்வம், சூப்பர்வைசர் சுரேஷ் கண்ணன் ஆகியோர், தினமும் மணிராசுவிற்கு, விற்பனை தொடர்பாக டார்ச்சர் கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.

இதனால், கடுமையான மன உளைச்சலில் இருந்த மணிராசு, எலி பேஸ்ட்டைத் தின்று, தற்கொலை செய்ய முயன்றார்.

ஆபத்தான நிலையில், இவரை, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குணமாகாத நிலையில், மணிராசுவை, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் என்று மணிராசு மரணம் அடைந்தார். அவரது உடல், அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால், மணிராசுவைத் தற்கொலைக்குத் துாண்டிய, செல்வம், மற்றும் சுரேஷ் கண்ணன் ஆகியோரைக் கைது செய்து, அவர்கள் மீது, வழக்குப் பதிவு செய்தால் தான், உடலைப் பெற்றுக் கொள்வோம், என்று, மணிராசுவின் உறவினர்கள், தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனால், அங்கு வந்த ஏர்வாடி இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, ராமநாதபுரம் டவுண் இன்ஸ்பெக்டர் கலாராணி ஆகியோர், அவர்களிடம் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்த பிறகு தான், மணிராசுவின் உடலை, அவரது உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a tasmac staff taken a dangerous decision


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->