ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய இலங்கையைச் சேர்ந்த மர்மப் படகு…! தீவிரவாதிகள் ஊடுருவலா? - Seithipunal
Seithipunal


 

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் சேரன் கோட்டை கடற்கரையில், மர்மப்படகு ஒன்று ஒதுங்கி இருந்தது. இதைக் கண்ட, அப்பகுதி மீனவர்கள் மரைன் போலீசார் மற்றும் புலனாய்வுத் துறைக்கு தகவல் தந்தனர்.

இதனை அடுத்து, மரைன் போலீசாரும், புலனாய்வுத் துறையினரும், அப்பகுதிக்கு விரைந்தனர். பின், அங்கிருந்த ஃபைபர் படகினைச் சோதனை செய்தனர். அது இலங்கையைச் சேர்ந்த படகு என்பது தெரிய வந்தது.

21 அடி நீளம் கொண்ட அந்த படகில், 25 ஹார்ஸ் பவர் கொண்ட, மோட்டார் இயந்திரம் பொருத்தப் பட்டிருந்தது. அந்தப் படகினை ஆய்வு செய்த போது, அதற்குள், இரண்டு கேன்களில் டீசல் மற்றும், ஹெட் பெல்ட் லைட் மற்றும் மீன் பிடி வலைகள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நள்ளிரவில், இலங்கையைச் சேர்ந்த மர்ம நபர்கள் யாரோ, இங்கு வந்துள்ளனர். யார் அவர்கள்? எதற்காக வந்தார்கள்? போதைப் பொருட்கள் கடத்தும் கும்பலா? தீவிரவாதிகளா?, வரும் குடியரசு தினத்தைக் குலைக்க வந்த கும்பலா? என்று ஆய்வுடன் விசாரணை செய்து வருகிறார்கள்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a strange fiber Cylon boat at Rameswaram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->