வழிதவறி தமிழகம் வந்த வடமாநில பெண்.. 3 வருடத்திற்கு பின்னர் கணவருடன் ஒப்படைத்த தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்.! - Seithipunal
Seithipunal


வழி தவறி வந்த வடமாநில பெண்ணை பராமரித்த மாவட்ட சமூக நலத்துறையினர், அவரது கணவருடன் ஒப்படைத்துள்ளனர். 

ஒடிசாவில் இருந்து கைக்குழந்தையுடன் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த பெண்மணி, தாம் எங்கு வந்துள்ளோம்? எங்கு இருக்கிறோம்? என்பது கூட தெரியாமல் இருந்துள்ளார். இதுதொடர்பான தகவல் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. 

அவர்கள் பெண்மணியை தேடி வந்த நிலையில், பெண்ணிடம் பேசி அவரை காப்பகத்தில் தங்க வைத்து பார்த்துக் கொண்டுள்ளனர். பிளாசி பாய் என்ற பெயரைக் கொண்ட அந்தப் பெண்மணி, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக நிறைமாத கர்ப்பிணியாக, கையில் ஒன்றரை வயது குழந்தையுடன் வந்துள்ளார். 

இவர் தூத்துக்குடிக்கு வந்து திருச்செந்தூர் கோவில் அருகே சுற்றித்திரிந்த நிலையில், இரயில் பயணத்தில் தவறுதலான இரயிலில் ஏறி இறுதியில் தூத்துகுடிக்கு வந்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை பகுதியில் இருந்த அவரை மீட்டு, பிரசவம் பார்த்து பராமரித்து வந்த சமூக நலத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர். 

இதனையடுத்து, ஒடிசா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஒடிசா காவல்துறையினர் மூலமாக பிளாசி பாயின் கணவரான குஷா பாயை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். தற்போது சுமார் மூன்று வருடங்கள் கழித்து, ஒடிசா காவல்துறையினர் உதவியுடன் தம்பதிகள் இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர். இருவரும் தங்களின் சொந்த ஊருக்கு இன்பமுடன் பயணம் செய்யவுள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a North Indian Woman from Odisha live Thoothukudi Thiruchendur Get back Odisha with Husband


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->