பேருந்து இயங்கிய முதல் நாளே சம்பவம்.. கண்ணாடியை உடைத்த பெண்மணி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்கள் நீங்கலாக அரசு பேருந்து சேவை துவங்கியது. நாளை முதல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சுமார் 67 நாட்களுக்கு பின்னர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 பணிமனையில் இருந்து 192 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடிக்கு பேருந்தில் பயணியை ஏற்றிய பேருந்து, ஆலங்குடி நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தனர். 

இப்பேருந்து புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் வழியாக சென்ற நேரத்தில், 45 வயது பெண்மணியொருவர் பேருந்தின் மீது கல்லை வீசியுள்ளார். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. பின்னர் பெண்மணி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பயணிகள் மாற்று பேருந்தில் செல்ல ஏற்பாடு செய்தனர். மேலும், பேருந்தில் கல்லை வீசிய பெண்மணி மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பது தெரியவந்தது. 

இந்த பெண்மணி பொதுமக்கள் மீது அவ்வப்போது கட்டை மற்றும் கம்புகள், கற்களை கொண்டு தாக்குதல் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அப்பகுதி மக்களின் கோரிக்கையாக பெண்ணை மாவட்ட நிர்வாகம் மீட்டு மனநல காப்பகத்தில் அனுமதி சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Mentally challenged woman strike bus front glass peoples panic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->