மின்வயரை உடலில் சுற்றிக் கொடூர மரணமடைந்த நபர்!! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!!  - Seithipunal
Seithipunal


மணலியில் உள்ள திரு.வி.க. தெருவைச் சேர்ந்த கோபால் (26) என்பவருக்கு வசந்தி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். 

கடந்த 2 மாதத்துக்கு முன்னதாக அவரது மனைவி வசந்தி, கோபாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  அவரது குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டார். இதன் காரணமாக கோபால் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். 

இந்நிலையில், கோபாலின் வீடு கடந்த 2 நாட்களாக உட்புறமாக பூட்டி கிடந்துள்ளது. எதிர்பாராத விதமாக இன்று காலை கோபாலின் வீட்டில் இருந்து மோசமான துர்நாற்றம் வீசியுள்ளது. 

இதன்காரணமாக அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து உடனடியாக மணலி காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். 

அப்போது கோபால் அங்கிருந்த அறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலில் மின் வயர்கள் சுற்றப்பட்ட நிலையில் இருந்துள்ளது. கோபாலின் மனைவி அவரை பிரிந்து சென்ற வேதனை தாங்க முடியாமல் அவர் மின்சாரத்தை தனது உடலில் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

English Summary

a men suicide with current in manali


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal