உடை மாற்றும் இடத்தில் ரகசிய கேமரா..கும்மிய மக்கள்..! 'சார் ஒரு நிமிஷம் சார்' கதறும் ஆசாமி.!  - Seithipunal
Seithipunal


கோயம்பத்தூர் மாவட்டத்தின் முக்கிய பகுதியில் இயங்கிவருகின்ற பெட்ரோல் பங்கில் வேலைபார்த்துவரும் நபர் ஒருவர் அந்த பங்கில் வேலை செய்துவரும் பெண்கள் உடை மாற்றும் இடத்தில வீடியோ எடுத்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

அந்த பெட்ரோல் பங்கில் வேலைபார்க்கும் பெண்கள் பணிக்காக பங்கிற்கு வந்த உடன் சீருடை மாற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சீருடை மற்றும் அதே அறையில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வரும் நபர் ஒருவர் தொலைபேசியில் வீடியோ கேமராவை ஆன் செய்து வைப்பதும், அவர்கள் சென்ற பின்னர் தொலைபேசியை எடுத்துக்கொண்டு செல்வதுமாக இருந்துள்ளார்.

இது போன்று அந்த பங்கில் வேலை செய்யும் 5 பெண்களின் உடை மாற்றும் வீடியோ அந்த நபரின் தொலைபேசியில் இருந்துள்ளது. வழக்கம் போலவே நேற்றும் தன்னுடைய வேலையை அவர் காட்டி இருக்கின்றார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த பெண்கள் மறைந்திருந்து அவரை கையும் களவுமாக பிடித்து இருக்கின்றனர்.

இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் அவர்கள் விரைந்து வந்து அந்த நபரை கைது செய்திருக்கின்றனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தன் மீது தவறு இல்லை என்று கூறுகின்றார். காவல்துறையினர் வருவதற்கு முன்பாகவே பெண்கள் அவரை அடித்து துவைத்து இருப்பது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A men capturing video during women dress changing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->