கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த காதலியின் கணவனுக்கு விழுந்த குத்து.!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இராயக்கோட்டையை அடுத்துள்ள கெலமங்கலம் அருகேயுள்ள தொட்டபேளுர் கிராமத்தை சார்ந்தவர் மாதேஷ் (35)., இவர் தறி இயக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் அம்பிகா (வயது 28).

இவர்கள் இருவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் முடிந்த நிலையில் சஞ்சனாஸ்ரீ என்ற 10 வயதுடைய மகளும்., தன்யஸ்ரீ என்ற 8 வயதுடைய மகளும் உள்ளனர். பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அம்பிகா., தினமும் பணிக்கு சென்று வருவது வழக்கம். 

அதே பகுதியையே சார்ந்தவர் இராமகிருஷ்ணனின் மகன் இராமமூர்த்தி (வயது 23)., இவரது மனைவியின் பெயர் சுமா. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த ஒருவயதுடைய குழந்தை இருக்கிறது. இந்நிலையில்., அம்பிகாவிற்கும் இராமமூர்த்திக்கும் இடையே கள்ளத்தொடர்பானது இருந்து வந்துள்ளது. 

இதனை அறிந்த மாதேஷ் தனது மனைவியை கண்டித்துள்ளார். மேலும்., நமக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது என்று கூறி அந்த பழக்கத்தை கைவிட கூறி கண்டித்துள்ளார். இதனை கேட்காத அம்பிகா தொடர்ந்தது பழக்கத்தை கைவிடாமல் இருந்து வந்துள்ளார். 

இதன் காரணமாக தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் மாதேஷை கொலை செய்வதற்கு இராமமூர்த்தி திட்டமிட்டு., நேற்று அம்பிகா வேலைக்கு சென்றுவிட்ட நிலையில்., அவரது குழந்தைகளும் அம்பிகாவின் தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். 

இந்த சந்தர்ப்பத்தை உபயோகம் செய்து கொண்ட ராமமூர்த்தி., மாதேஷ் பணி முடிந்து இல்லத்திற்கு நேற்று இரவு 8 மணியளவில் திரும்பியவுடன் அவரை கத்தியால் குத்திவிட்டு கொலை செய்துள்ளார்.

பணிமுடித்துவிட்டு இல்லத்திற்கு வந்த அம்பிகா கணவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அறிந்த காவல் துறையினர்., உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மாதேஷின் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்., மேலும்., தலைமறைவான ராமமூர்த்தியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

English Summary

A HUSBAND KILLED BY HER ILLEGAL RELATION SHIP


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal