அரியலூரில் வானை நோக்கி 9 முறை துப்பாக்கியால் சுட்ட அதிகாரி!! விசாரணையில் வெளியான வினோத காரணம்!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 18ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதனையடுத்து தமிழக கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்தால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பது, பட்டுவாடாவை தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், அரியலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளராக ஹரியானாவைச் சேர்ந்த ஹேமந்த் ஹல்க் என்ற ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

அவர் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி இருந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் ஒரு பரபரப்பான சம்பவத்தை இன்று காலை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவரிடம் விசாரித்ததில் ஹேமந்த் ஹல்க் இன்று அதிகாலை தனது அறையிலிருந்து வெளி வந்து அங்கிருந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர் ஒருவரின் துப்பாக்கியை கேட்டுள்ளார்.

உயர் அதிகாரி என்பதால் காவலரும் மறுக்காமல் துப்பாக்கியை அவரிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கிய ஹேமந்த் ஒன்பது முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அனைவரும் இந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்து வந்து பார்த்தனர்.

பின்னர் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தனது அறைக்குச்சென்று ஹேமந்த் ஹல்க் அமர்ந்துகொண்டார். அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் எஸ்பி ஆகியோர் வந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் வேலைப்பளு காரணமாக இப்படி செய்தாரா இல்லை ஏதேனும் மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை செய்து கொள்ள முயன்றாரா? அல்லது பணப்பட்டுவாடா குறித்து எச்சரிக்கை விடுத்தாரா என விசாரணை நடத்தினர்.

ஆனால் இவை அனைத்திற்கும் முரணாக அவர் குடிபோதையில் இருந்ததால் இச்செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அரியலூர் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A higher officer did childish in ariyalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->