ராமநாதபுரம்: ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வினோத திருவிழா...!! - Seithipunal
Seithipunal


ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதல்நாடு கிராமத்தில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வருடந்தோறும் புரட்டாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த திருவிழாவின் ஆண்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பது காலம்காலமாக பின்பற்றி வரும் நடைமுறை. அதே போல இந்த வருடம் திருவிழா நடைபெற்றது. திருவிழா தேதி அறிவிக்கப்பட்டவுடன் அந்த பகுதிக்கு பெண்கள் யாரும் செல்லவில்லை.

எல்லைபிடாரி அம்மன் கோவிலில் பீடம் அமைத்து கைகுத்தல் பச்சரி சமைத்து 50 மேற்பட்ட செம்பறி ஆடுகளை பலியிட்டு அந்த சாதத்தினை அவர்கள் உருவாக்கிய பீடத்தின் மீது வைத்து பூஜை செய்தனர்.

அதன் பின்னர், அந்த பிரசாதத்தை அங்கு வந்திருந்த ஆண்கள் சாப்பிட்டு மீதமிருந்ததை வீட்டிற்கு எடுத்து செல்ல கூடாது என்பதால் அங்கேயே புதைத்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A festival attended only by men


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->