சொல்லியும் கேட்காமல் சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்.! தந்தையின் கொடூர பரிசு.!  - Seithipunal
Seithipunal


ஆம்பூரில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மகளுக்கு தந்தையே கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குப்ப ராஜபாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கு, அர்ச்சனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற இளைஞரை இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளார்.

சுப்பிரமணி மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அர்ச்சனாவின் காதலுக்கு அவரது பெற்றோர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சரவணன் தனது மகளுக்கு, " காதல் திருமணம் நிரந்தர வாழ்க்கையை கொடுக்காது. ஆரம்பத்தில் இருக்கும் மகிழ்ச்சி இறுதிவரை நீடிக்காது. எனவே, பெற்றோர் பார்த்து முடிவு செய்யும் வரனை தேர்ந்தெடு. அதுதான் உனக்கு நிம்மதியைக் கொடுக்கும்" என தெரிவித்துள்ளார்.

ஆனால் அர்ச்சனா சரவணன் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளாமல், அவரது காதலனை திருமணம் செய்ய முடிவு செய்தார். ஆம்பூரில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது அவரது தந்தை சரவணனுக்கு தெரிந்தவுடன், அவர் மிகுந்த ஆத்திரம் அடைந்துள்ளார். தனது மகள் இறந்து விட்டதாக கூறி கதறி அழுதுள்ளார்.

மேலும், அவர் இறந்துவிட்டதாக கூறி ஆம்பூர் முழுவதும் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து உள்ளார். இதனை கண்ட உறவினர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். இது குறித்து சில உறவினர் சரவணனிடம் தொடர்புகொண்டு கேள்வி எழுப்பவே, "சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால், இறுதிச் சடங்கு நடத்த இருக்கின்றேன்" என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் ஆம்பூர் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

English Summary

a father punished her daughter for love marriage


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal