தங்கும் விடுதியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ….! மனதைப் பதற வைக்கும் சம்பவம்….! திடுக்கிடும்  காரணம்….! - Seithipunal
Seithipunal


 

விருதுநகர் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 55). இவர் விருப்ப ஓய்வு பெற்ற எஸ்.ஐ.

இவரது வீட்டில், ஒரு வயதானவர்கள் தங்கி இருந்தனர். அவர்களின் மகள் நாகேஸ்வரி (வயது 35) அடிக்கடி தன் தாயாரைப் பார்ப்பதற்காக, அவர் வீட்டிற்கு வந்த போது, தங்கராஜுவிற்கும், நாகேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து, இருவருக்கும், பணம் கொடுக்கல் வாங்கலும் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், மதுரை அழகர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தங்கராஜ் வந்தார். அவருடன் நாகேஸ்வரியும் வந்திருந்தார்.

நாகேஸ்வரி தனது 13 வயது மகளையும் அழைத்து வந்திருந்தார். இந்த நிலையில், விடுதியில், தங்கராஜ், நாகேஸ்வரியின் 13 வயது மகளைப் பலாத்காரம் செய்ய முயன்றதாகத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் குழந்தை, தன் அப்பாவிற்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லியது. உடனே, அவர்கள் விரைந்து அழகர் கோவில் விடுதிக்கு வந்தனர்.

பின், அவர்களுக்குள் கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விடுதியில், தங்கராஜ் மர்ம உறுப்பு மற்றும் காதுகள் அறுக்கப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியையும் காணவில்லை.

இதனைத் தொடர்ந்து, கொலை செய்தவர்களைத் தேடித் தனிப்படை விரைந்தது. திருநெல்வேலி அருகே உள்ள முக்கூடல் பகுதியில், பதுங்கியிருந்த நாகேஸ்வரி, அவரது கணவர் குமார், அவரது தம்பி வசந்த் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.

English Summary

a cruel murder of Police S.I.


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal