கைலாசா நாட்டின் அதிபரிடம், தமிழக 90 கிட்ஸ் முக்கிய கோரிக்கை.. நிறைவேற்றுவாரா? கைலசா அதிபர்.!! - Seithipunal
Seithipunal


இணையதளங்களில் தினமும் கேலி சித்திரங்கள் மற்றும் நகைச்சுவையை ஏற்படுத்தும் புகைப்படங்களுக்கு பஞ்சமே இல்லை. இணையதளங்கள் இன்றளவில் சிரிப்பலைகளை ஏற்படுத்தும் பல விஷயங்களை கொண்டுள்ளது. இது நெட்டிசன்களிடம் சிக்கினால், இதனை ட்ரெண்டிங்கும் செய்து விடுவார்கள். 

தற்போதுள்ள காலகட்டத்தில் 90 கிட்ஸ் பிரச்சனைகள் பெருமளவு பேசப்பட்டு வருகிறது. மேலும், முன்னதாக பிறந்த 80 கிட்ஸ் குழந்தைகளுடன் வாழ்க்கையை நடத்தி வரும் நிலையில், 2 கே கிட்ஸ் தங்களின் காதலி / மனைவியுடன் இன்பமாக இருந்து வருகின்றனர். இதில், காதலியும் இல்லாமல், மனைவியும் இல்லாமல் தவியாய் தவித்து வரும் சூழ்நிலையில் 90 கிட்ஸ் இருக்கின்றனர்.

இந்நிலையில், திருமணம் செய்ய பெண் இல்லாமல் இருக்கும் 90 கிட்ஸ், கைலாசா நாட்டு அதிபர் நித்யானந்தாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். இளைஞர்கள் மத்தியில் பிரபலமான நித்யானந்தா, கைலாசா என்ற நாட்டினை உருவாக்கி இருப்பதாக அறிவித்து, அதற்கான நாணயங்கள் வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் மனஉளைச்சலில் உள்ள எங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நித்யானந்தாவுக்கு 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் அனுப்பி உள்ள கோரிக்கை போன்ற கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 90 கிட்ஸ் ஆக இருக்கும் நாங்கள் காதலியும் இல்லாமல், திருமணம் செய்யவும் இயலாமல் தவித்து வருகிறோம். இதனால் தங்களின் ஆசிரத்தில் இருக்கும் பெண்களை எங்களுக்கு மணம்முடித்து வைத்து, உத்தியோகமும் தரவேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நித்யானந்தாவின் மீது இருக்கும் பல வழக்குகளின் பேரில், அவருக்கு ரெட் கார்னர் நோட்டிஸ் பிறப்பித்து கைது நடவடிக்கை ஒருபுறம் தீவிரமாகி வரும் நிலையில், நித்யானந்தாவை வைத்து நமது நெட்டிசன்கள் விளையாடும் விதம் இணையத்தில் பெரும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

90 Kids request Nithyananda


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->