ஒன்பது ஓட்டுகள் அபேஸ்..? ஈரோட்டில் உள்ள வாக்குசாவடிக்கு மறுதேர்தல் - இம்மி பிசிறாமல் வேலை பார்க்கும் தேர்தல் ஆணையம்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம் சட்டசபை தொகுதியில், ஒரு வாக்கு சாவடியில் மாதிரி ஓட்டுப்பதிவை அழிக்காமல், வாக்கு பதிவு நடந்ததால், அந்த வாக்குச்சாவடியில் மட்டும், மறு வாக்குப்பதிவு நடத்த வாய்ப்புள்ளது.

ஈரோடு மக்களவை தொகுதியில், 1,678 ஓட்டுச்சாவடிகளில் கடந்த  ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

இதில், காங்கேயம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவில் அருகே திருமங்கலம் என்ற ஊரில், வாக்குச்சாவடிஎண் 248ல் மாதிரி வாக்குப்பதிவை அழிக்காமல், தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்து உள்ளது. இதனால், மாதிரி வாக்குகள் 50ம் உடன் சேர்த்து பதிவானது.

மொத்தம் 736 வாக்குகள் பதிவானது அதோடு மாதிரி வக்குகள் 50 சேர்த்தால், 786 வாக்குகள் இருக்க வேண்டும். ஆனால், அங்கு 9 குறைவாக, 777 வாக்குகள்  மட்டுமே உள்ளன.

வாக்குபதிவுக்கு மறுதினம், அனைத்து வாக்குச்சாவடியிலும் வாக்களித்த வாக்காளர்கள் எண்ணிக்கை, பதிவான வாக்குகள், முகவர்களிடம் உள்ள வாக்கு விபரங்களை சரி பார்த்தனர். அப்போது இந்த பிரச்னை தெரிய வந்தது.

இது குறித்து, தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். மறு வாக்குப்பதிவு நடத்தவும் பரிந்துரைத்தோம். தேர்தல் ஆணையம் என்ன உத்தரவிடுகிறதோ, அதை செயல்படுத்துவோம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் கதிரவன் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 votes missing voter machine erode


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->