தமிழக சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை.. முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் மறைந்த அண்ணாவின் 113-வது பிறந்தநாள் மற்றும் 75-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக சிறையில் இருந்து 75 ஆயுள் தண்டனை கைதிகள் முதற்கட்டமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக சிறைகளிலிருந்து நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த 75 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். புழல் வேலூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட சிறைகளில் இருந்து மொத்தம் 75 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

தமிழ்நாடு அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து 13, வேலூர் 2, கடலூர் 5, சேலத்தில் ஒருவர், கோவையில் 12, மதுரையில் 22, புதுக்கோட்டையில் 4 பேர் புழல் பெண்கள் தனி சிறையில் 2 பெண்கள் என ஆக மொத்தம் 75 பேர் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

75 prisoners released from Tamil Nadu jails


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->