60 ஆண்டு பழுது, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்பு.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் பழுதான 7 மதகுகளை மாற்றி அமைப்பதற்கான பணிகள் தொங்கியுள்ளது.  கிருஷ்ணகிரி கேஆர்பி அணையானது 60ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த அணையில் பிரதான 7 மதகுகளும் கடந்த 2017-ல் உடைந்தது. இதையடுத்து 7 மதகுகளும் இதே போன்று சேதமாகி இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

அணையின் பாதுகாப்பு கருதி அன்று முதல் 42 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், 7 மதகுகளையும் மாற்றி அமைப்பதற்காக 19 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தற்போது, புதிய மதகு தயாரிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் நேற்று அணையின் பழைய 7 மதகுகளையும் வெட்டி அகற்றும் பணிகள் தொடங்கியது. இதையடுத்து வரும் பிப்ரவரி மாதத்தில் புதிய மதகு பொருத்தும் பணி தொடங்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

60 years formers request success


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->