கீழடியில் முதன்முறையாக கிடைத்த பொக்கிஷம்! புகைப்படங்கள் வெளியீடு! - Seithipunal
Seithipunal


கீழடியில் தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தற்போது  6-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. நான்கு இடங்களில் இந்த  அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த அகழாய்வு பணியின் போது, கொந்தகை என்னும் இடத்தில்  மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த  மனித எலும்புக்கூடு 6 அடி நீளமுள்ளதாக இருக்கிறது.  மனித எலும்புக்கூடு முதல்முறையாக முழு அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஆராய்ச்சியாளர்களுக்கு புதிய தகவல்கள் கிடைக்கும் என்ற ஆர்வத்தினை கொடுத்துள்ளது. 

ஏற்கனவே கடந்த  மாதங்களில் எலும்பு கூடுகள் கிடைக்கபெற்றன. ஆனால் அவை அனைத்தும்  குழந்தைகளின் எலும்பு கூடுகளாகவே இருந்தன. மேலும் கொந்தகை அகழாய்வில் முதுமக்கள் தாழிகளும் கிடைத்தது. அதில் இருந்து மனித எலும்புகள் கிடைக்கபெற்று ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

ஆனால் அதே சமயம்  முதல்முறையாக முழு அளவில் 6 அடி நீளமுள்ள எலும்பு கூடுகள் கிடைத்துள்ளது. இந்த எலும்புகளை ஆய்வு செய்த பின்னர் எந்த ஆண்டில் வாழ்ந்தவை, எலும்புகளின் பாலினம், வாழ்க்கை முறைகள் ஆகியவை தெரியவரும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 Feet human bones found in keezhadi excavating


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->