கிராமசபை கூட்டத்தில், 5 ஆம் வகுப்பு மாணவி செய்த காரியம்.! வாய் பிளக்கும் ஊர்மக்கள்.!  - Seithipunal
Seithipunal


மதுரையில் இருக்கும் கிராமம் ஒன்றில் நடந்த கிராம சபையில் துணிச்சலுடன் பேசி, பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி பெற்று தந்த 5 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. 

ஜனவரி 26 ஆம் தேதி மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் கிராம சபைக்கூட்டம் நடந்தது. இதில் சஹானா என்ற 5 ஆம் வகுப்பு மாணவி சக மாணவிகளுடன் வந்து கலந்துகொண்டார்.

அப்போது, 6 ஆம் வகுப்பு படிக்க சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மாயாண்டிபட்டி உயர்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டி இருப்பதாகவும், ஆனால் அதற்கு இங்கிருந்து தேவையான பேருந்து வசதியில்லை என்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் தெரிவித்தார்.

சமூகவலைதளங்களில் மாணவியின் இந்த துணிச்சலான செயல் பரவி, பலருடைய பாராட்டுக்கு ஆளானது. இந்நிலையில் மாணவியின் கோரிக்கையை ஏற்ற உள்ளாட்சி அமைப்பு, மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து மாயாண்டிபட்டி வழியாக மீனாட்சிபுரம் வரை இயக்கப்படும் என்று அறிவித்து தற்போது பேருந்து வசதியை கொடுத்து இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 th std girl did shock activity in madurai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->