தஞ்சாவூர்: 5 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ்.?! மருத்துவமனையில் ஏற்பட்ட பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும், பொதுவெளிகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 

நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 219 பேர் இந்தியர்கள் மற்றும் 39 பேர் வெளிநாட்டவர்கள் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 3 பேர் ஆளானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் 5 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக வெளியான தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கின்றது. குழந்தைக்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதால், தாயும், சேயும் தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த விவரமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 month baby affected by corona in thanjore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->