பீலா விட்ட தமிழக அமைச்சர்….! கொந்தளித்துப் பாய்ந்த மக்கள்…..! மலேசியாவிலிருந்து திரும்பிய தமிழர்களின் சோகச் செய்தி….! - Seithipunal
Seithipunal


 

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லுார் அருகே உள்ள தலைவன்கோட்டையைச் சேர்ந்த 49 பேர், மலேசியாவிற்கு, கடந்த ஆண்டு ஜுலை மாதம் வேலைக்குச் சென்றனர்.

நல்ல சம்பளம் என்று அழைத்துச் செல்லப்பட்ட இவர்களுக்கு,  ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில், கேபிள் பதிக்கும் பணி  வழங்கப் பட்டது.

தினமும் 20 மணி நேர வேலை, சரியான உணவு இல்லை, உட்கார்ந்தபடியே துாங்க வேண்டிய நிலையில், கொத்தடிமைகளாக இருந்தனர்.

இதனால், இவர்கள், தங்களுக்கு வேலை வேண்டாம். பாஸ்போர்ட்டைக் கொடுங்கள். நாங்கள் ஊருக்குப் போகிறோம், என்று கேட்டனர். ஆனால், 2 வருட காண்டிராக்ட் முடிந்தால் தான் அனுப்புவோம், என்று அந்த நிறுவனம் அவர்களை மிரட்டி உள்ளது.

இதனால் அவர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர். பாஸ்போரட் இல்லாததால், மலேசிய போலீசாரால் கைது செய்யப் பட்டனர். விஷயம் தெரிந்து, மலேசிய தமிழ் சங்கத்தினர் அவர்களுக்கு உதவி செய்தனர்.

ஆனாலும், பாஸ்போர்ட் இல்லாததால், அவர்களை இந்தியாவிற்கு அனுப்ப இயலவில்லை.

இந்த நிலையில், ஒரு மீட்டிங்கிற்காகச் சென்ற கனிமொழியிடம், தலைவன் கோட்டையைச் சேர்ந்தவர்கள், இது குறித்து, மனு அளித்தனர். அவர்களின் நிலைமையை எடுத்துக் கூறினர்.

கனிமொழி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் நிலைமையை எடுத்துக் கூறினார். அவர் மூலமாக, மலேசிய சிறையில் உள்ள தமிழர்கள் விடுவிக்கப் பட்டனர்.

பாஸ்போர்ட் இல்லாததால், எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கி, இந்திய துாதரகமே, அவர்களுக்கு, விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து, இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது.

அதன்படி, அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது, அங்கு வந்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை வரவேற்று, உங்களை மீட்க, தமிழக அரசு, பெரும் முயற்சி எடுத்தது என்று கூறினார்.

இதைக் கேட்டு கொந்தளித்த அவர்கள், “எங்களை மலேசிய தமிழ் சங்கம் தான் கனிமொழி வாயிலாக மீட்டது. தேர்தல் நெருங்குவதால், நீங்கள் தான் நடவடிக்கை எடுத்ததாக பொய் கூறுகிறீர்கள், என்று அரசு அதிகாரிகள் கொண்டு வந்த வாகனத்தில் ஏறாமல், புறக்கணித்து விட்டு, தலைவன் கோட்டை மக்கள் கொண்டு வந்த வாகனத்தில் ஏறிச் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

49 Tamil workers recovered from Malaysia jail


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->