மாமல்லபுரம் நகரத்திற்கு உள்ளே செல்ல அனுமதி இல்லையா? கடுமையாக அவதிப்படும் பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


இன்று காலை முதல்  மாமல்லபுரத்தில் 4 சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் வருகிற 12,13 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இந்நிலையில், இரு நாட்டு தலைவர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் மாமல்லபுரம் நகரத்திற்குள் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது 

மாமல்லபுரம் நகரத்தில் இயங்கி வந்த பேருந்து நிலையம் தற்காலிகமாக கிழக்கு கடற்கரை சாலக்கு  மாற்றப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து ஒரு வாரகாலமாக மாமல்லபுரம் நகரத்திற்குள் செல்லும் வாகனங்களையும் அனைத்தையும் போலீஸ் முழு சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

இதனைதொடர்ந்து இன்று காலை முதல் மாமல்லபுரம் நகரத்திற்கு வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுமக்களும் மாமல்லபுரம் நகரத்திற்கு செல்ல கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் நுழைவாயிலிருந்து நடை பயணமாக சென்று வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 wheelers not allowed in mahabalipuram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->