கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த வந்த நான்கு பட்டதாரி இளைஞர்கள்..!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு உத்தரவானது அமலாகியுள்ளது. இதனால் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால், மதுபான கடத்தல் மற்றும் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் காவல் துறையினர் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சமயத்தில், அங்குள்ள அன்னவசால் பகுதியில் உள்ள புத்தூர் சாலையில் உள்ள பூட்டப்பட்ட இல்லத்தில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டதில் வீட்டிற்குள்ளேயே விற்பனைக்கு தயாராக இருந்த சாராயம், சாராய உரல் மற்றும் சாராயம் காய்ச்ச தேவையான பொருட்கள் இருந்துள்ளது.

வீட்டில் இருந்த நான்கு வாலிபர்களை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், வீட்டின் உரிமையாளர் வெளியூரில் வசித்து வருவதால் வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதனையடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய முடிவு செய்த நால்வரும் சேர்ந்து, இந்த வீட்டை தேர்தெடுத்து தெரியவந்துள்ளது. 

இவர்கள் அங்குள்ள கிழங்காட்டூர் பகுதியை சார்ந்த தவமணி, நாகேஸ்வரன், கார்த்திக் மற்றும் ராஜேஷ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் பட்டதாரிகள் என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 graduate youngster arrest make liquor alcohol in sivakangai police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->