தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் பிரம்மாண்ட விஷ்ணு சிலைக்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறையை வெட்டி எடுத்து 400 டன் எடையில் 64 அடி உயரத்தில் விஸ்வரூப மகாவிஷ்ணு சிலை செதுக்கப்பட்டு கர்நாடகாவுக்கு எடுத்து செல்லப்படுகிறது.  இதற்கு தடை கேட்டு தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 
 
கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் ஸ்ரீகோதண்டராம சாமி கோவில் அமைந்துள்ளது. சுமார் 60 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் மூலவர் ஸ்ரீகோதண்டராம சாமி, விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வீர ஆஞ்சநேயர், வராகர், அய்யப்பன், அஷ்டலட்சுமி, தட்சணாமூர்த்தி, நவக்கிரகம் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளன.

இக்கோயிலுக்கு ஒரே கல்லினாலான சுமார் 64 அடி உயர, 11 முகங்கள் மற்றும் 22 கைகள் கொண்ட பிரமாண்ட கோதண்டராம சுவாமி சிலை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. மேலும், சாமி சிலை, ஆதிசே‌ஷன் சிலை (7 தலை பாம்பு) மற்றும் பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் கொரக்கோட்டை கிராமத்தில் ஒரு பாறை உள்ளது என்பதை செயற்கைக்கோள் மூலம் கண்டறிந்தனர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று, கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறைக்குன்றிலிருந்து பாறையை தோண்டி, வெட்டி எடுக்கும் பணி கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கியது.

அந்த பாறையில் இருந்து நவீன இயந்திரங்கள் மூலம், சாமி சிலை செய்வதற்காக சுமார் 64 அடி நீளம், 26 அடி அகலம், 7 அடி உயரம் கொண்ட கல்லும், ஆதிசே‌ஷன் சிலை (7 தலை பாம்பு) செய்வதற்காக சுமார் 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி உயரம் கொண்ட  கல் தோண்டி வெட்டி எடுக்கப்பட்டது.
 
இதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், சிலை உருவாக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரிகள் மூலம் பிரமாண்ட சிலை கர்நாடகாவுக்கு எடுத்து செல்லப்படுகிறது. 
 
இந்நிலையில், திருவண்ணாமலையிலிருந்து கொண்டு செல்லப்படும் பிரம்மாண்ட விஷ்ணு சிலைக்கு தடை கேட்டு வழக்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

அதாவது, 350 டன் எடை கொண்ட சிலையால், சாலைகள், குடியிருப்புகள், கட்டடங்கள் சேதம் என ஏற்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

350 Ton Statue Karnadaka Going Case File High Court


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal