பிளாஸ்டிக் விற்பனைக்கு  3 லட்சத்து 51 ஆயிரம் அபராதம்.! வணிகர்கள் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட சோதைனையில். சுமார் 2  டன் பிளாஸ்டிக் கைப்பற்றப்பட்டது. இதற்கு 3  லட்சத்து 51 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் தமிழகத்தில் அணைத்து இடங்களிலும்  பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பான சோதனைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 3 முறை அபராதம் விதித்த நபர்  பின்னர் மீண்டும் விற்பனை செய்தால் அவருக்கு கடும்  தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது தமிழக அரசு.

இதுகுறித்து இந்த மாதம் 17  மற்றும் 18 தேதிகளில் சோதனை நடைபெற்றது. அதில்  1,831 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 832.05 கிலோ பிளாஸ்டிக் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 57 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த கடைக்காரர்கள் 175 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும்  ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டது.

நேற்று மட்டும் 1,734 கடைகளில் சோதனை செய்யப்பட்டு, 1,092.45 கிலோ பிளாஸ்டிக் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து, 68 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தமிழத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 130 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 lakhs 51 thousand fine for selling plastic. sellers shocked


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->