சேலம் மாநகராட்சியில் மேற்கொண்ட திடீர் தணிக்கை!  மொத்தமாக 'சீல்' வைத்த நிர்வாகம்!! - Seithipunal
Seithipunal


லக நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸால் மக்கள் அனைவரும் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று பொதுமக்கள் வழக்கம்போல சிக்கன், மட்டன் சாப்பிடுவதற்காக அசைவ கடைகளின் முன் கூட்டம் குவிந்து காணப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது, இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பியது போல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், சிக்கன் மட்டன் வாங்குவதற்காக கடைகளில் குவிந்து கொண்டிருக்கின்றன.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்புக்கான வேலைகள் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற வரும்போது தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க, சமூக இடைவெளி ஏற்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று அனைத்து இறைச்சி, மீன் கடைகளில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்திட, சமூக இடைவெளிக் கோடுகள் வரைய மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. மேலும், இதனைக் கண்காணிக்க 5 சிறப்புக் குழுக்கள் அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவினர் மாநகர் முழுவதும் இன்று திடீர் தணிக்கை மேற்கொண்டதில், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்ட அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதியில் சமூக இடைவெளி ஏற்படுத்தி வியாபாரம் மேற்கொள்ளாத 28 இறைச்சி மற்றும் மீன் கடைகள் கண்டறியப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த கடைகளின் உரிமையாளர்கள் மீது உரிய விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

28 chicken shop sealed in Salem


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->