ஒரேயடியாக குறைந்த தங்கத்தின் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.. இன்றைய விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,651க்கும், ஒரு சவரன் ரூ.37,208 விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ. 41ரூபாய் குறைந்து ரூ.4,610க்கும், சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.36,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி கிராம் ஒன்று ரூ.60.70க்கும், கிலோ ரூ.60,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

27.09.2022 gold Price


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->