ஒரேயடியாக குறைந்த தங்கத்தின் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.. இன்றைய விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய  நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,670க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,360க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ.4,650க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ.61.50க்கும், கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.61,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24.09.2022 gold Price


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->