2026 சட்டமன்றத் தேர்தல்..புதுச்சேரி பொறுப்பாளர்களுடன்  கமல்ஹாசன் ஆலோசனை! - Seithipunal
Seithipunal


ம.நீ.ம  தலைவர் கமல்ஹாசன்  உடன் புதுச்சேரி பொறுப்பாளர்கள் சந்திப்பு! 

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயலாற்றுவது தொடர்பாக ம.நீ.ம  தலைவர் கமல்ஹாசன்  உடன் புதுச்சேரி பொறுப்பாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயலாற்றுவது தொடர்பாகவும் புதுச்சேரி மக்கள் நீதி மய்ய பொறுப்பாளர்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக  மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் புதுச்சேரி பொறுப்பாளர்கள் திரு. G.R.சந்திரமோகன், மாநில பொதுச் செயலாளர் தலைமை அலுவலகம், திரு. ப.முருகேசன் ,புறநகர பொதுச்செயலாளர் அவர்களுடன் கலந்த ஆலோசனை செய்தார்கள்.

இச்சந்திப்பின் பொழுது மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா, தமிழக பொதுச் செயலாளர் திரு. அருணாச்சலம், மாநில செயலாளர் தலைமை நிலையம் திரு.செந்தில் ஆறுமுகம், புதுச்சேரி மாநில வழக்கறிஞர் மாணவர் அணி அமைப்பாளர் திரு.R.C . ஜெயச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது புதுச்சேரிக்கு தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வருகை தர வேண்டுமென புதுச்சேரி பொறுப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2026 assembly elections Kamal Haasan consults with Puducherry officials


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->