திண்டுக்கல்லில் வேகமாக பரவும் உன்னி காய்ச்சல்.. 2 பேர் பலியானதால் பொதுமக்கள் பீதி..!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வது வார்டு பகுதியில் உன்னி காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காந்திநகர் மற்றும் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மாநகராட்சியின் 48 வது வார்டு பகுதியில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. புதிய வகை உன்னி காய்ச்சல் ஒரியண்டா சுட்டுகாமோஷி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மத்தியில் வேகமாக பரவி வரும் உன்னி காய்ச்சல் தொடர்பாக சுகாதாரத் துறையினர் பெயர் அளவில் மட்டுமே தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மாநகராட்சி, சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் பிரச்சாரம் செய்ய வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திண்டுக்கல்லில் வேகமாக பரவாரம் உன்னி காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 people died of Unni fever in dindigul district


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->