கொரோனாவிற்கு தமிழகத்தில் முதல் பலி! அதிகாலையில் வந்த அதிர்ச்சி செய்தி!  - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸிற்கு இதுவரை தமிழகத்தில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் நோயாளி பலியான துயரம்  மதுரையில் நிகழ்ந்துள்ளது. 

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனவானது, இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 18 பேருக்கு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் ஒருவர் குணமாகி வீடு திரும்பியுள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்த மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார். 

அவருக்கு ஏற்கெனவே நுரையீரல் நோய், உயர் ரத்த அழுத்தம், கட்டுப்படடுத்தப்படாத சர்க்கரை இருந்தது. இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபடுத்தி உள்ளார். 54 வயதான அந்த நோயாளி வெளிநாட்டு சுற்றுப்பயணம் எதுவும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவருக்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுடன் நேரடிப் பழக்கம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். 

தற்பொழுது 16 பேர் தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு உயிரை கூட இழக்க விரும்பவில்லை என முதலமைச்சர் அறிவித்த நிலையில், அறிவித்த இரண்டு நாட்களிலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது சோகத்தினை உண்டாக்கியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1st died in tamilnadu corona virus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->