குறைவதை போல் குறைந்து ஒரேயடியாக உயர்ந்த தங்கத்தின் விலை.. இன்றைய விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில், கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு தங்கத்தின் விலை ரூ.1000 வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 4583க்கும், ஒரு சவரன் விலை ரூபாய் 40 உயர்ந்து ரூ. 37120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூபாய் 62க்கும், ஒரு கிலோ விலை ரூபாய் 62000க்கும் விற்பனை செய்யப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17.09.2022 gold Price


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->