17 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர்... 10 ஆண்டுகள் சிறை தண்டனை.!
17 years old girl raped in Cuddalore
கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே உள்ள ராசா பேட்டையை சேர்ந்தவர் வாழ்முனி மகன் தீபன் (வயது 20). இவருக்கும் 17 வயது இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த சிறுமியை வீட்டில் இருந்து கடத்தி சென்று அருகில் உள்ள காட்டில் வைத்து சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த கடலூர் துறைமுகம் போலீசார் தீபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்துள்ளார். அதன்படி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தீபனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டரையும், ரூபாய் 4000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
English Summary
17 years old girl raped in Cuddalore